டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
இலங்கை கிழக்குப் பல்கலைகழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்றல்கள் நிலையத்தினால் நடாத்தப்பட்ட டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 18.01.2025 திகதி சனிக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக மட்டக்களப்பு தொழில்நுட்ப பூங்கா கேட்போர் கூடத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தின் பணிப்பார் பேராசிரியர் எஸ்.ஜெயராசா தலைலமயில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் “விவசாயத்தில்” 60 பேரும் “தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் 16 பேரும் “ஆய்வுக்கூட தொழில்நுட்பத்தில்” 04 பேரும் “பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சேவை வழங்கலின் மூலம் அமைதியை பேணுதல்” பாட நெறியில் 09 பேரும் டிப்ளேமா சான்றிதழ்களை இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்ர், பல்கலைக்கழக பீடாதிபதிகள் கல்வி சார், சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.