உள்நாடு

சதொசவில் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்

சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் இன்று (22) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது 1,095 ரூபாவாக இருந்த நிலக்கடலை ஒரு கிலோவின், புதிய விலை ரூ.995 ஆக உள்ளது. ஒரு கிலோ சிவப்பு சீனியின் முந்தைய விலை 340 ரூபாவாகவும், புதிய விலை 300 ரூபாவாகவும் உள்ளது

210 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின், புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கௌப்பி கிலோ ஒன்றின் முந்தைய விலை 795 ரூபாவாகவும், புதிய விலை 765 ரூபாவாகவும் காணப்பட்டது

960 ரூபாவாக இருந்த ஒரு கிலோ நெத்தளியின் புதிய விலை 940 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது. 845 ரூபாவாக இருந்த ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் புதிய விலை 830 ரூபாவாக உள்ளது.

655 ரூபாவாக இருந்த பாசுமதி அரிசி (பிரீமியர்) கிலோ புதிய விலை ரூ.645 ஆக உள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் முந்தைய விலை 240 ரூபாவாகவும், புதிய விலை 230 ரூபாவாகவும் உள்ளது.

ஒரு கிலோ துவரம் பருப்பின் முந்தைய விலை 290 ரூபாவாகவும், புதிய விலை 288 ரூபாவாகவும் உள்ளது.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் முந்தைய விலை 242 ரூபாவாகவும், புதிய விலை 240 ரூபாவாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *