ஈஸ்டர் தாக்குதல்; ஒரு வார காலத்துக்குள் முன்னேற்றகரமான தகவல்கள்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஒரு வாரத்திற்குள் தகவல்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் பல்வேறு கோணங்களில் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் வாரத்தில் இதுதொடர்பிலான சில முன்னேற்றகரமான தகவல்கள் வெளியிடப்படும்.
இதேவேளை, திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பாக, சிங்கப்பூர் குடிமகனான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதில் பல்வேறு சவால்கள் உள்ளன. ஆனால் இந்த வழக்கில் சிங்கப்பூரின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.