வாழைச்சேனை நஹ்ஜா மாணவன் இல்ஹாம் தேசியத்தில் முதலிடம்
தேசிய ரீதியாக நடைபெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் வாழைச்சேனை நஹ்ஜா அரபுக் கல்லூரி மாணவன் இல்ஹாம் தேசியத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர்
அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ரஹ்மதுல்லாஹ் (அல்பலாஹி, அல்அதிரமீ) தெரிவித்தார்.
சவூதி அரேபியா நாட்டின் அனுசரணையுடன் இலங்கை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இம்மாதம் 18 ஆம் திகதி தேசிய ரீதியில் நடாத்திய அல் குர்ஆன் மனனப் போட்டியில் 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில், மூன்றாம் பிரிவு 05 ஜுஸ்உவில் மாணவன் இல்ஹாம் முதலிடம் பெற்று கல்லூரிக்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
இவர், மஸ்ஜிதுல் ஹுதா வீதி பிறைந்துரைச்சேனை எனும் முகவரியில் வசிக்கும் எம்.எல்.எம்.இல்யாஸ், எஸ்.ஐ.கதீஜா தம்பதிகளின் புதல்வராவார்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)