புகையிரத வண்டியில் மோதி நபரொருவர் காயம்!
புகையிர வண்டியில் மோதி நபரொருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை காலை ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஓட்டமாவடி பகுதியால் செல்லும் போது நபரொருவர் புகையிரத பாதையை கடக்கும் போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில், காயமடைந்தவர் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)