சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பலகை!
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் விழிப்புணர்வு பலகைகளை காட்சிப்படுத்தி வருகின்றனர்.
பொலித்தீன் பாவனையைத் தவிர்த்து சூழற் தொகுதியைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் பிரதேசத்தில் பல இடங்களில் இந்த விழிப்புணர்வு பலகையை அமைத்து வருகின்றனர்.
அதன் தொடரில் செவ்வாய்க்கிழமை (21) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வளாகத்திலும் விழிப்புணர்வு பலகையை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதில், சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயலாளர் எஸ்.ஐ..எம்.தௌபீக், பொருளாளர் ஐ.பதுர்தீன், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜெமீல், தாதிய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)