உள்நாடு

வெற்றிகரமாக நிறைவுற்ற தெல்தோட்டை இரத்த தான முகாம்

தெல்தோட்டை பிரதேச செயலக கிராம அலுவலர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 5 வது வருடாந்த இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது.

இதில் பங்குபற்றிய 113 பேரில் 85 பேர் தமது இரத்தத்தை தானமாக வழங்கினர். மழையுடன் கூடிய குளிர் காலநிலையையும் தாண்டி ஆர்வத்துடன் 113 பேர் இம்முகாமில் கலந்துகொண்டது விசேட அம்சமாகும்.

இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கும், அனுசரனை வழங்கியவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கிராம அலுவலர் நலனபுரி சங்கம்.
பிரதேச செயலகம்.
தெல்தோட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *