கற்பிட்டி பிரதேச சபையின் தெரு விளக்கு பராமரிப்பு பிரிவிற்கு விசேட வாகன வசதி
கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட சகல வீதிகளிலும் காணப்படும் தெரு விளக்குகள் சபையின் வாகனம் பழுதடைந்ததன் காரணமாக நீண்ட நாட்களாக திருத்தப்படாமல் காணப்பட்டது .
இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் கற்பிட்டி பிரதேச சபையின் குறித்த வாகனம் திருத்தப்பட்டு நவீனத்துவத்துடன் கற்பிட்டி பிரதேச சபையிற்கான முறைப்பாடுகளை மக்கள் தமது இருப்பிடங்களில் இருந்த வண்ணம் தெரிவிக்கும் வகையில் ஈசபா ( esabha) என்ற செயலியையும் அறிமுகப்படுத்தி திங்கட்கிழமை (20) முதல் தமது தெரு விளக்கு பராமரிப்பு பணியினை ஆரம்பித்துள்ளது.
கற்பிட்டி பிரதேச வாழ் மக்கள் கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவிக்க வேண்டிய முறைப்பாடுகளை இச்செயலியின் ஊடாக இலகுவாக தெரியப்படுத்தி தமக்குரிய சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு கற்பிட்டி பிரதேச செயலாளர் மங்கள ராமநாயக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)