உள்நாடு

கற்பிட்டி தில்லையூர், தேத்தாவாடி கிராமத்திற்கான பிரதான வீதியின் அவலநிலை

கற்பிட்டி தில்லையூர் – தேத்தாவாடி கிராமத்தின் கற்பிட்டி நகரில் இருந்து தில்லையூர் மற்றும் தேத்தாவாடி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதி சிறிய மழையின் போதும் நீரில் மூழ்கிவிடும் நிலையில் காணப்படுகிறது .

இக்கிராம மக்கள் தமது அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் அன்றாடம் கற்பிட்டி நகருக்கு பயணம் செய்யக்கூடிய ஒரே ஒரு பிரதான வீதியாக காணப்படுவதுடன் உல்லாச ஹோட்டல்களுக்கும் இவ் வீதியே பயன்படுத்தப்படுகிறது. இவ் வீதி புணரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பதுடன் தில்லையூர் கிராமத்தில் காணப்படும் கனிஷ்ட பாடசாலைக்கு அயல் பகுதி மாணவர்கள் பயண்படுத்தும் இவ் வீதி நீரில் முழ்கிவிடுவதனால் மாணவர்களும் பாடசாலை ஆசிரியர்களும் பொது மக்களும் நீரில் இறங்கி செல்ல வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறு இவ் வீதி சிறிய மழையின் போது மழை வெள்ளம் மற்றும் கடல் வெள்ளம் என்பவற்றினால் நீரில் முழங்கி விடுவதற்கான பிரதான காரணியாக காணப்படுவது அருகில் இருந்த நீரோடையை நிரப்பி சரியாக திட்டமிடப்படாமல் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவரினால் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம். என இக்கிராம மக்கள் தமது அதிர்ப்த்தியை வெளியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் – றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *