அர்ச்சுனா எம்.பீ.யை கைது செய்யுமாறு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு
யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவை கைது செய்யுமாறு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் (21) உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ரம்பாவ பகுதியில் (20) போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விளக்குகளை ஒளிரச் செய்து வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதன்போது போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை கோரியுள்ளனர்.
பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவணங்களை வழங்க மறுத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து போக்குவரத்து சட்டங்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலைல் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவை கைது சேய்ய அனுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)