அனுராதபுர மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக செயலமர்வு
இலங்கை பத்திரிகை பேரவையின் ஏற்பாட்டில் அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக செயலமர்வு எதிர்வரும் (25) ஆம் திகதி நடைபெவுள்ளது.
அதன்படி “சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஊடகவியலாளர்களின் வகிபாகம்” என்ற தலைப்பில் இச்செயலமர்வை நடத்துவதற்கு இலங்கை பத்திரிகை பேரவை தீர்மானித்துள்ளது.
இதன் போது விரிவுரையாளர்களாக பேராசிரியர் டியூடர் வீரசிங்க மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அரியநந்த தொம்பகஹவத்த ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
குறித்த செயலமர்வு அனுராதபுரம் ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள தேசிய பின் அறுவடை முகாமைத்துவ நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)