அனுராதபுரத்தில் இன்று கன மழை.புனித நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
அனுராதபுரத்தில் இன்று (21) மாலை பெய்த கனமழை காரணமாக அனுராதபுரம் சுற்றுலா பொலிஸ் அனுராதபுரம் தொல்லியல் பணிப்பாளர் அலுவலக வளாகம் அனுராதபுரம் ஹோட்டல் பாடசாலை மற்றும் புனித நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
மல்வத்துஓயாவின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வடைந்து வரும் நிலையில் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேல் நீர்த்தேக்க பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாச்சியாதீவு , நுவரவாவி உள்ளிட்ட பிரதான குளங்களில் வழிந்து செல்லும் நீர் மற்றும் பல சிறிய குளங்களின் கசிவு நீர் என்பன மல்வத்துஓயாவில் சேர்த்துள்ளது. இதனால் மல்வத்துஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
மல்வத்துஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாகவும் அதன் நீர் அனுராதபுரம் புனித நகரின் ஊடக தந்திரிமலை ஊடாக மன்னாருக்கு வடிந்து செல்வதாவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மல்வத்துஓயா நிரம்பி வழிதால் அதன் தாழ்நிலப் பகுதியில் வசித்து வரும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
( எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )