அமெரிக்க ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்டுள்ள 7 கட்டுப்பாடுகள்.
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக வொஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டடத்தில் நேற்றைய தினம் டொனால்ட் ட்ரம்ப் மற்றும்
துணை ஜனாதிபதியாக ஜே.டி. வான்ஸும் பதவியேற்றுக்கொண்டார்கள்.
இவ்வாறு ஜனாதிபதியாக இருப்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவையாவன,
1. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பவர், முன்னாள் ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதி யாரும், கார் ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது.
2. அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, சொந்தமாக தொலைபேசி உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
3. ஜனாதிபதியாக இருப்பவரின் குழந்தைகள் அல்லது பேரக் குழந்தைகளின் பாடசாலைகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. அவ்வாறு பங்கேற்பதாக இருந்தால் பாடசாலைகளுக்கு கூடுதல் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும்.
4. சமூக ஊடகங்கள் மூலம், அமெரிக்க ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் சமூக ஊடகங்கள் பயன்படுத்தக் கூடாது.
5. அமெரிக்க ஜனாதிபதிகள் தனி விமானத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.
6. எந்த ஆவணங்களையும் குப்பை என்று ஜனாதிபதியால் தூக்கி எறிய முடியாது. அதேபோல தேவையற்ற மின்னஞ்சல்களை அழிக்க முடியாது.
7. அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பவர், தனது அறையின் ஜன்னல் கதவுகளை திறக்கக் கூடாது அதேபோல வெள்ளை மாளிகையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளையும் திறக்கப்படக் கூடாது.