உள்நாடு

பேதங்களை மறந்து சமூக எழுச்சிக்காக ஒன்று திரள வேண்டும்; சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்.

“பேதங்களை மறந்து சமூக எழுச்சிக்காக ஒன்று திரள வேண்டியது காலத்தின் தேவையாகும்” என்று. தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளரும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொதுச் செயலாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி கலாபூஷணம் ரஷீத் எம். இம்தியாஸ் தெரிவித்தார்.

கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (18) வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் ஏ. ஜி. ஏ. ஹபீல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு. கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர். டி. சி. ஐ அந்தரகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இங்கு கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி கலாபூஷணம் ரஷீத் எம். இம்தியாஸ் தனது உரையில் மேலும் கூறியதாவது.

“ஒரு ஊரின் முன்னேற்றத்தில். இடையூறாக இருக்கின்ற ஆமைகள் களையப்பட வேண்டும். பொறாமை ஒன்று சேராமை ஒத்துழைக்காமை. விட்டுக் கொடுக்காமை முதலான பல ஆமைகள் ஒரு ஊரின் முன்னேற்றத்திற்கு தடையாக அமைகின்றது. இவற்றை களையும் போதுதான் அந்த ஊர் முன்னேற்றம் காணும் என்பது எனது நம்பிக்கை.

உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலத்தில் கல்வி கற்ற. மாணவர்கள். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையிலும் உயர்தரப் பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் தேசிய ரீதியான போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பது எமக்கெல்லாம் பேருவகை தருகிறது.

இத்தகைய சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொடுப்பதற்கும் மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்கும் அரும்பாடுபட்ட ஆசிரியர்கள். அதிபர் உட்பட பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *