பஸ் முச்சக்கர வண்டி விபத்தில் கண்டி பதியுத்தீன் கல்லூரி மாணவி பலி
பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் உடுதெனிய ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உயர்தரப் பிரிவு மாணவியொருவர் ஸ்தலத்திலே பலியான கோர சம்பவமொன்று நேற்று (19) கண்டி மைலபிட்டிய எனும் இடத்தில் இடம்பெற்றது.
ஆசிக் பாத்திமா அம்னா வயது (19) என்ற மாணவியே இப்பரிதாப மரணத்தை தழுவியவராவார்.
தனது தாய், தந்தை சகோதரர் சகிதம் தனது வசிப்பிடமான உகுரஸ்ஸபிட்டிய ஊரிலிருந்து தாய் ஊரான உடுதெனிய ஊருக்கு முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த சமயம் தனியார் பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் மோதியதாலேயே இம்மாணவி ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.
முச்சக்கர வண்டியை ஓட்டி வந்த மாணவியின் சகோதரரும் தாயும் தந்தையும் பலத்த காயங்களுடன் ரிகில்லகஸ்கட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவியின் ஜனாஸா நல்லடக்கம் உடுதெனிய ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் இன்று (20) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
( ரஷீத் எம். றியாழ்)