ஒலுவில்-பாலமுனை சமுர்த்தி வங்கியின் பொதுச்சபைக் கூட்டமும் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் தெரிவும்.
ஒலுவில் பாலமுனை சமுர்த்தி வங்கியின் 2025 ம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டமும் கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினர்கள் தெரிவும் 2025.01.19 ம் திகதி ஒலுவில் ஜாயிசா மகளிர் கல்லூரியில் ஒலுவில் பாலமுனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் T. K. றஹ்மத்துல்லா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் MAC. அகமட் நசீல் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தத்துடன் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் AM. ஹமீட், வங்கிச்சங்க முகாமையாளர் ரீ பரமானந்தம் மற்றும் வங்கி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனார்.
நிகழ்வின் இறுதியில் இவ்வாண்டுக்கான புதிய கட்டுப்பாட்டுச் சபை தவிசாளராக ஏ.எம்.பழீல் அவர்களும் ஏனைய, உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/01/IMG-20250119-WA0180.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/01/IMG-20250120-WA0105.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/01/IMG-20250120-WA0106.jpg)
(இஸட்.ஏ.றஹ்மான்)