10 மாத குழந்தையை கொலை செய்த தாய்
ஹபரணை பொலிஸ் பகுதிக்குட்பட்ட பலுகஸ்வெவ யில் 10 மாத குழந்தையை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் தாய் ஒருவர் (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனகம பலுகஸ்வெவ பகுதியில் வீடொன்றில் குழந்தை ஒன்று இறந்து விட்டதாக ஹபரணை பொலிஸ் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை (17) தகவல் கிடைத்துள்ளது.இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது இது ஒரு கொலை என தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த கொலை தொடர்பில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை எனவும் இரவு குழந்தையை வீட்டிற்கு பின்னால் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசி பின்னர் குழந்தையை மீட்டு வீட்டின் கட்டிலில் வைத்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் புலனகம பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய தாய் என பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)