மோட்டார் சைக்கிள் இராணவ கெப் மோதலில் பொலிஸ் சார்ஜன்ட் பலி.
ஹபரணை – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று இராணுவ கெப் வண்டியுடன் மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மின்னேரிய பொலிஸ் பகுதியில் கடமையாற்றும் 34 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.
ஹபரணை பகுதியில் இருந்து மின்னேரிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த இராணுவ கெப் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் ஹிங்குராக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)