நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவுசரில் ஆட்டோ மோதி விபத்து; மூவருக்கு காயம்!
மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பவுசர் வண்டியின் பின் பக்கமாக ஆட்டோ மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த குடும்பத்தாருடன் ஆட்டோவில் ஏறாவூர் பகுதிக்குச் சென்று ஊர் திரும்பிச் செல்லும் போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில், ஆட்டோவைச் செலுத்தி வந்த நபர் சந்திவெளி வைத்தியசாலையிலும், ஆட்டோவில் பயணித்த இரு பெண்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டடு, பின்னர் அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-19-at-23.06.17_db01875a-1024x770.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-19-at-23.06.16_cc3c2fce.jpg)
(எச்.எம்.எம்.பர்ஸான்)