அமெரிக்கா, ஜப்பான் செல்லும் ஜனாதிபதி அனுர
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அடுத்த வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் பரஸ்பர உறவுகள், பொருளாதார நலன்களைக் கருத்திற் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் நட்பு நாடுகளான அமெரிக்கா,ஜப்பானுடனுக்கான விஜயங்கள் மூலம் இலங்கை பாரிய பொருளாதார நன்மைகளை ஈட்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஏற்கெனவே இந்தியா, சீனாவுக்கான விஜயங்களை மேற்கொண்டதன் மூலம் இலங்கைக்கு முன்னொருபோதும் கிடைக்காத உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.