ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தி மட்டக்களப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணி.
ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை இலங்கை அரசு மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையினை தொடர்ந்து மட்டக்களப்பு ஜாமிஉல் ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயல் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் நடேசன் சுந்தரேசன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணியில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நழீம் உட்பட பொதுமக்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.
“இலங்கை அரசே சர்வதேச சட்டவாக்கங்களை அமுல்படுத்து” , மியன்மாரில் இருந்து மேலும் ஒரு இலட்சம் அகதிகள் படையெடுப்பார்கள் என்ற பீதீயை கிளப்பாதே , ரோஹிங்கிய அகதிகளை துன்புறுத்தும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பாதே “போன்ற பதாதைகளை கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டோர் ஏந்தி நின்றமை குறிப்பிடத்தக்கது
(எம்.பஹத் ஜுனைட்)