நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்கள்பாவனைக்கு கையளிக்குமாறு சவூதி தூதுவர் கோரிக்கை.!
சவூதி அரேபியாவின் நிதியுதவியில் அக்கரைப்பற்று, நுரைச்சோலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போதே நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது