கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.
கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலில் நடைபெற்றது.
கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளையின் தலைவர் பிர்தெளஸ் ஹாஜி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நிட்டம்புவ பெளத்த விகாரையின் விகாராதிபதி கால்லே தம்மிந்த நாஹிமி தேரர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய நிட்டம்புவ விகாராதிபதி கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ தலைவர் பிர்தெளஸ் ஹாஜியின் சமூக சேவைப் பணிகளைப் பாராட்டிப் பேசினார். நிகழ்வில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் எம்.ஈம்.முஹம்மத் உட்பட மேலும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்