Friday, January 17, 2025
உள்நாடு

ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்க.அரசை வலியுறுத்தும் கவனயீர்ப்பு பேரணி.மட்டக்களப்பு காந்தி சிலை முன்றலில்

17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காந்தி சிலை அருகில் நடைபெறும் ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கத்தை வலியுறுத்தும் அமைதி பேரணியில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் M.S.நழீம் பொதுமக்களிடம் வேண்டுகோள்.

இலங்கையர்களாகிய நாம் கொடூர உள்நாட்டு யுத்தத்தின் துயரமான பிரதிபலிப்புகளை அனுபவ ரீதியாக நடைமுறை வாழ்வில் கண்டவர்கள் , அகதி வாழ்வின் துயர்மிகு எச்சங்களை இன்று வரை கண்டு வருகிறோம் , இது இவ்வாறு இருக்க 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி காலப்பகுதியில் உயிரை கையில் பிடித்து கொண்டு பெண்கள் சிறுவர்கள் அடங்கலாக ரோஹிங்கியா இல் இருந்து வந்து நாட்டின் வடகடல் பகுதியில் தத்தளித்த 104 அகதிகளை மீட்டு தடுத்து வைத்து பராமரித்து வந்த நிலையில் எவ்வித முறையான உத்தரவாதங்களும் இல்லாது அவர்களை திருப்பி அனுப்பி வைக்க இந்த அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது .

இந்த நிலையில் UNHCR இன் அகதிகள் பாதுகாப்பு தொடர்பான நடைமுறையை பின்பற்றி அவர்களை எவ்வித உத்தரவாதங்களும் இன்றி அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை அரசு மீள் பரிசீலனை செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளனத்துடன் இணைந்து வெள்ளிக்கிழமை – (17.01.2025) ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து (பிற்பகல் 1 மணிக்கு ) மட்டக்களப்பு- காந்தி சிலை முன்றலில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் பேதங்கள் பாராது நேசக்கரம் நீட்ட ஒன்றிணையுமாறு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் –

M.S.நழீம்
பாராளுமன்ற உறுப்பினர்
மட்டக்களப்பு மாவட்ட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *