ஊடகவியலாளர் ஹாரிஸுக்கு கௌரவம்.
சிலோன் மீடியா போரத்தின் உறுப்பினரும், தமிழன், காலைக்கதிர், முரசு, சுதந்திரன், ஒருவன், ஈழநாடு, உதயம் போன்ற பத்திரிகையின் மத்திய முகாம் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றும் ஊடகவியலாளர் முஹம்மட் ஹாரிஸ் நிர்வாக உயர் அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்டார்.
அம்பாறை மாவட்ட சமுர்த்தி விசாரணை அதிகாரியாக கடமையாற்றும் இவர் கடந்த ஐந்து வருட காலமாக சிறந்த பிராந்திய செய்தியாளராகவும், மெட்ரோ லீடர் பத்திரிகையில் பக்க வடிவமைப்பாளராகவும், ஸ்கை தமிழ் துணிந்தெழு சஞ்சிகையின் பக்க வடிவமைப்பாளராகவும், உதயம் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் ஊடகத்துறையில் பணியாற்றி வருகின்றார்.
சிலோன் மீடியா போரத்தின் ஐந்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு “இலங்கை நிர்வாக சேவை உயரதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடலும் கௌரவிப்பு விழாவும்” அண்மையில் நிந்தவூர் அட்டப்பள்ளம் சுற்றுலா விடுதியின் இடம்பெற்றது. இதன் போது சிறந்த பிராந்திய செய்தியாளர் மற்றும் பத்திரிகை சிறந்த பக்க வடிவமைப்பாளர் விருது ஊடகவியலாளர் முகம்மட் ஹாரிஸூக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வி. ஜெகதீசன் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு கௌரவித்தனர்.