இடமாற்றம் பெற்றுச் சென்ற கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர், அண்மையில் ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா
கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்விப் பணிப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா கற்பிட்டி கோட்ட அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபருமான ஏ.எச்.ஏ சகூர் தலைமையில் வியாழக்கிழமை (16) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இச் சேவை நலன் பாராட்டு விழாவில் அதிதிகளாக புத்தளம் வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எச் எம் அர்ஜூன , உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ அனீஸ், கற்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ. எம் ஜவாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இச்சேவை நலன் பாராட்டு விழாவில் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளராக ஒன்பது வருடங்கள் சேவையாற்றி புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் திட்டமிடல் அதிகாரியாக இடமாற்றம் பெற்றுச் சென்ற என் எம் ஆர்.தீப்தி பெர்னான்டோ, மாம்புரி பாடசாலையின் அதிபராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற டி.எம்.எஸ் திசாநாயக்க அத்தோடு அண்மையில் ஓய்வு பெற்ற அல் ஹிரா பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம் அஸ்ரப் அலி மற்றும் திகழி முஸ்லிம் பாடசாலையின் அதிபர் எம்.ஐ எம்.எம் றஸ்ஸாக் ஆகியோரின் சேவைகள் பாராட்டி கௌரவிக்கப் பட்டனர் இதன்போது கற்பிட்டி கோட்ட கல்வி பணிமனையின் அதிகாரிகள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ் – றிஸ்வி ஹூசைன், புத்தளம் நிருபர் சனூன்)