மல்வத்துஓயா பெருக்கெடுப்பு. அவதானத்தோடு இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்
அனுராதபுரம் புனித நகர் பகுதியை அன்மித்துள்ள மல்வத்துஓயாவின் இருபுறமும் உள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
மல்வத்துஓயா நிரம்பி வழிவதால் அனுராதபுரம் புனித நகர் பகுதியில் உள்ள வீதி நீரில் மூழ்கியுள்ளது.இதனால் புனித நகர் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சந்தி வரையிலான வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பெய்து வரும் கடும் மழை காரணமாக நாச்சியாதீவு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அலுவலகம் தெரிவித்தது.
இன்று (16) மாலையாகும் போது மல்வத்துஓயாவின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வையும் எனவே மல்வத்துஓயாவின் தாழ்நிலப் பகுதியில் வசித்து வரும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நாச்சியாதீவு நீர்ப்பாசன பொறியாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)