பத்து வீத நெல்லைக் கூட அரசு கொள்வனவு செய்யாது; எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன்.
அரசாங்கம் அரச நெற் களஞ்சியசாலை களுக்கு சென்று ஊடக கண்காட்சி செய்த போதிலும் தற்போதைய அரசாங்கம் பத்து வீத நெல்லைக்கூட கொள்வனவு செய்யும் என்பதில் நம்பிக்கை இல்லை என சர்வஜன பல கட்சியின் அனுராதபுரம் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ரஞ்ஜித் சமரகோன் தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் உள்ளூர் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு உரிய விலை கிடைக்காமல் சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் பாவனையாளர்களுக்கு அசெளகரியம் ஏற்படாத வகையில் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும்.தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்கு படுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கியதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் . தற்போதைய அரசாங்கத்திடம் அவ்வாறான எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)