உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா சனிக்கிழமை
கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த உடுதெனிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அதிபர் ஏ .ஜீ . ஏ.ஹபீல் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவுக்கு கண்டி கல்வி வலயத்தின் பணிப்பாளர் டீ.சீ.ஐ. அந்தரகே பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளரும். அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொதுச் செயலாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி கலாபூஷணம் ரஷீத் எம். இம்தியாஸ் விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
கண்டி வலய திட்டமிடல் பணிப்பாளர் எம்.சி.டி.கஸ்தூரி ஆரச்சி பிரதிக் கல்வி பணிப்பாளர் ஏ ஆர். எப் அமீன். கோட்டக் கல்விப் பணிப்பாளர். எஸ். தமிழ்ச்செல்வன் உதவிக் கல்விப் பணிப்பாளர் ரமேஷ் பாபு ஆசிரிய ஆலோசகர் எஸ். ராஜகோபால் ஆகியோரும். இவ்விழாவில் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியால மாணவ மாணவிகளின் கலை கலாசார நிகழ்ச்சிகள் இங்கு விசேட அம்சங்களாக இடம் பெறவுள்ளன.
( ரஷீத் எம். றியாழ்)