பொதுப் பாதுகாப்புக்கு அதிக நிதி. அரசின் கல்விக் கொள்கைக்கு முரண். ஆசிரியர் சங்கம் கேள்வி?
அரசாங்கத்தின் வரவு- செலவு திட்டத்தில் கல்விக்காக 271 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ள நிலையில் பொதுப் பாதுகாப்புக்காக 614 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் இது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்த கல்விக் கொள்கைக்கு முரணாணது எனவும் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்குமாறு கடந்த அரசாங்கங்களை வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி, போர் இல்லாத சூழலில் பாதுகாப்புச் செலவை அதரிகரித்தது ஏன் என சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.
பாதுகாப்பு அமைச்சின் மூலதனச் செலவு 76 பில்லியன் ரூபாவாக இருந்தாலும் கல்விக்கான மூலதனச் செலவு 65 பில்லியன் எனக் கூறிய அவர் கல்விக்கு இதை விட நிதியை ஒதுக்க வேண்டும் என வெளிப்படுத்தினார்.
இதேவேளை, கல்விக் 6 வீதத்தை ஒதுக்குங்கள் எனக் கோரி, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் சங்கம் அண்மையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.