சமாதான நீதிவான்களின் விபரக் கொத்து நூல் வெளியீட்டு விழா
சாய்ந்தமருதூரில் உள்ள 160 சமாதான நீதவான்களுள் 102 சமாதான நீதவான்கள் மற்றும் அகில இலங்கை சமாதான நீதவான்கள் பெயர் புகைப்படம் அடங்கிய விபரக் கொத்து டிரக்டரி நூல் வெளியீட்டு விழா 14.01.2025 செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது மாளிகை காட்டில் உள்ள வாவா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை மஜிஸ்ரேட் பதில் நீதவான் வடகிழக்கு சட்ட உதவி வழங்கும் கொமிசனர் , சபீர் அஹமட், சாய்ந்தமருது பிரதேச செயலாளர்,எம்.எம்.ஆசிக், சட்டத்தரனி சௌபி எம்.இஸ்மாயில், இவ் அமைப்பின் தலைவர் யு.எல்.எம். அஜீஸ், செயலாளர் எம்.எம். உதுமாலெப்பை மற்றும் உலமா சபைத் தலைவர், சாய்ந்தமருது வைத்திய பொறுப்பதிகாரி சனுஸ் காரியப்பர் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்
சாய்ந்தமருதுாரில் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகள், தற்போது சேவையில் உள்ள அரச அதிகாரிகளும் 102க்கும் மேற்பட்டோர்கள் கடந்த 3 தசாப்தங்களாக சமாதான நீதாவன்களாக சேவையாற்றுபவர்களை அதிதிகள் கௌரவித்தனர்.
இங்கு உரையாற்றிய பதில் நீதாவன் சபீர் அஹமட் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சட்டம் பற்றிய அறிவினைக் கொண்டிருக்க வேண்டும். என்று சட்டம் கட்டளையிடுகின்றது. சமுகத்தில் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக நியமனம் பெற்றுள்ள சமதான நீதவான்கள் தங்களைச் சுற்றியுள்ள மக்கள் அமைதியாக தங்களது உரிமைகளை உள்ளபடி அனுபவித்து வாழ்கின்றாரா்களா என்பதையாவது அறிந்து அமைதியை ஏற்படுத்தற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளவர்கள் என உரையாற்றினார்.
(அஷ்ரப் ஏ சமத்)