உள்நாடு

முழு நேர ஊழியராக சமுதாயத்துக்கு ஆற்றிய பங்களிப்பை மறக்க முடியாது.தாருஸ்ஸலபிய்யா முதல்வர் அஷ்ஷெய்க் அபூபக்கர் ஸித்தீக் மதனி அனுதாபம்.

புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது மறைவு கேள்விப்பட்டு ஆழ்ந்த கவலையும் துக்கமும் அடைந்துள்ளோம் என்று தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம், அஷ்ஷெய்க் முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி தெரிவித்தார்.


பிரல்யமான மார்க்க அறிஞர். புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவருமான அஷ்ஷெய்க்அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் மரணம் குறித்து தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம், அஷ்ஷெய்க் முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டுக்கும், இஸ்லாமிய தஃவாப் பணிக்கும் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் பங்களிப்பு மகத்தானது. இதில் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது ஈடுபாடு முதன்மையானது. முழு நேர ஊழியராக இருந்து சமுதாயத்துக்கு அவர் ஆற்றிய சமூகப் பணிகள் என்றும் மறக்க முடியாதவை. எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா அவரது பணிகளையெல்லாம் அங்கீகரித்து அருள் புரிய வேண்டுமென்றும், அவரது மறுமை வாழ்வு சிறப்படையவும், ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவன வாழ்வு கிடைக்கப் பெறவும் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரை இழந்து தவிக்கின்ற குடும்பத்தாருக்கும், காசிமிய்யா உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *