புத்தளம் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமின் ஜனாஸா இன்று மாலை நல்லடக்கம்.
கொழும்பு தனியார் மருத்துவமனையில் நேற்று காலமான புத்தளம் மத்றஸதுல் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் ஜனாஸா இன்று பிற்பகல் மஸ்ஜிதுல் பகாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஸர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.
இதேவேளை அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 வரை மத்றஸதுல் காசிமிய்யாவில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட ஜெம்மியதுல் உலமாவின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றிய அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் இன நல்லுறவு சமூகப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டினார்.
இதற்காக வேண்டி காசிமிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் அவரது சேவைகளைப் பாராட்டி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.