ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது!
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் நேற்று திங்கட்கிழமை (13) இரவு 09.30 மணியளவில் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கருவாட்டுக்கல் 02 பகுதியைச்சேர்ந்த 18 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றும் பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையானது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ. நஸார், தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ரபாயீடீன், பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஏ. பாரூக் போன்ற அதிகாரிகளினால் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(கே எ ஹமீட்)