எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்ற தைப் பொங்கல் கொண்டாட்டம்.
தமிழ் மக்களால் மிகுந்த பக்தியுடனும், உற்சவத்துடனும் கொண்டாடும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (14) பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வொன்று கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் வெகுவிமர்சியாக இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியையும், ஐக்கிய மக்கள் கூட்டணியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.