அனுராதபுர மாவட்டத்தில் பிரதான நீர்த்தேங்கங்களில் வான் கதவுகள் திறப்பு.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 14 பிரதான நீர்த்தேக்கங்களில் 09 நீர்த்தேக்கங்கள் வடிந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் அனுராதபுரம் வலய நீர்ப்பாசன பணிப்பாளர் ஜெயந்த டீ சில்வா தெரிவித்தார்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக இந்த பிரதான நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாவும் வலய பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன்படி நாச்சியாதீவு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா நான்கு அடியிலும் இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடியிலும் மூன்று கதவுகள் இரண்டு அடியிலும் திறக்கப்பட்டுள்ளது. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் தலா இரண்டு அடிக்கு இரண்டு வான் கதவுகளும் ,மஹாவிலச்சிய நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. மஹாகனந்தராவ நீர்த்தேக்கத்தில் தலா ஒரு அடி மற்றும் இரண்டு அடியிலும் திறக்கப்பட்டுள்ளன. அபய வாவி ,துருவில நீர்த்தேக்கம் மற்றும் திசாவாவி, நுவர வாவி தலா இரண்டு அடியிலும் திறக்கப்பட்டுள்ளதுடன் கலாவாவியின் ஒரு வான் கதவு இரண்டு அடியிலும் திறக்கப்பட்டுள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)