119 அவசர இலக்கத்துக்கு 12 போலி அழைப்புக்கள்; சந்தேக நபரை கைது செய்ய நீதிவான் உத்தரவு
பொலிஸ் தலைமையக 119 அவசர இலக்கத்திற்கு 12 போலி அழைப்புக்களை மேற்கொண்டு பொலிசாரை தவறாக வழிநடத்த முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் நீதிமன்றம் திறப்பனை பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
திறப்பனை பதிஸ்ரம்பேவ பகுதியில் வசித்து வரும் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி பொலிஸ் தலைமையக 119 அவசர அழைப்பு தொடர்பாடல் நிலையத்திற்கு சந்தேக நபர் 12 தொலைபேசி அழைப்புக்களை செய்துள்ளதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் அல்லது திறப்பனை பொலிஸ் பகுதியில் எவ்வித குற்றச் செயல்களும் இடம்பெவில்லை எனவும் அவ்வாறான குற்றச்செயல் இடம்பெறுவதற்கான எந்தத் தயார் நிலையும் இருக்கவில்லை எனவும் பொலிசார் நீதி மன்றத்தில் தெரித்துள்ளனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)