புத்தளத்தில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் மீட்பு
புத்தளம் மணல்குண்று பகுதியில் புத்தளம் பொலிஸாரின் சுற்றிவளைபில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்களை மீட்டனர்.
புத்தளம வேப்பமடு பகுதியில் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவீன மோட்டார் சைக்கிள் (Pulser) கடந்த 10 ஆம் திகதி திருடப்பட்டது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமரா காட்சிகளின் அடிப்படையில், பொதுமக்கள் உதவியுடன், மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேக நபரை நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது மோட்டார் சைக்கிளைத் திருடி மணல்குன்று பகுதியில் தளபாட செய்யும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பொலிஸார் தளபாட செய்யும் இடத்தை சுற்றிவளைத்த போது பாரியளவில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் இருப்பதைக் கண்டுப்பிடித்துள்ளனர்.
தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த தளபாடம் செய்யும் இடத்தில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் திருத்தும் பணிகள் இடம்பெற்று வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள்களின் உதிரிப்பகங்களை கலற்றி விற்பனையில் ஈடுப்பட்டு வந்திருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் பல இடங்களில் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல மோட்டார் சைக்கிள்களின் பாகங்கள் கைப்பற்றியதாகவும் பல போலி எண் தகடுகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது தளபாட உரிமையாளர் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை திருத்துவதற்கு அனுமதி வழங்கியக் குற்றச்சாட்டில் தளபாட உரிமையாளரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மோட்டர் சைக்கிள் திருத்தும் உரிமையாளர் ஏற்கனவே தற்காலிகமாக கொழும்பிற்குச் சென்றுள்ளதாகவும் அவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தளபாட உரிமையாளர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவரென்றும் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் மன்னார் பகுதைச் சேர்ந்தவென்றும் புத்தளத்தில் திருமணம் முடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
(ஏ.என்.எம் முஸ்பிக் – புத்தளம்)