J.M.J MEDIA வின் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல்
J.M.J மீடியா நிறுவனமானது சமூகத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் முன்னெடுத்து, அதனை செயற்படுத்தி வருகின்ற நிலமையில் மரநடுகை திட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பார்ளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
J.M.J media இன் நிறுவன பணிப்பாளர் ஜஸூரா ஜலீலின் தலைமையின் கீழ் J.MJ media இல் உலக நாடுகலில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்ட திட்டங்களான வாசிப்பு தின நிகழ்ச்சி மற்றும் இயற்கையை காப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மரக்கன்றுகள் நடும் திட்டம் போன்றவற்றில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று யெஸ்ரா டியூஷனின் சிறப்பு விழாவில் இடம்பெற்றது.
இதன்போது இந்நிகழ்வுக்குப் பிரதம அதீதியாக பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் கரங்களால் அம் மாணவ, மாணவிகளுக்கு J.M.J media வின் சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.