அல்லாஹ்வின் முன்னால் மண்டியிட்ட அமெரிக்கா
காஸாவில் இஸ்ரேலும், அமெரிக்காவும் 80 ஆயிரம் டன் குண்டுகளை போட்டு ஒரு வருடமாக செய்த அழிவை விட பல ஆயிரம் மடங்கு அதிக அழிவுகள் ஓரிரு நாட்களில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ளது.
காஸாவில் நரகத்தை உண்டாக்குவேன் என்று கொக்கரிக்கும் அமெரிக்கா அதிபர ட்ரம்புக்கு இப்போது அதன் ட்ரைலர் இப்படித்தான் இருக்கும் என்று புரிந்தால் சரி.
உலகிலேயே அதி உச்ச அறிவியலை கொண்ட அமெரிக்கா அல்லாஹ்வின் அழிவுக்கு முன்னால் மண்டியிட்டுள்ளது. அத்தனை அறிவியல் ஆற்றல்கள் இருந்தும் ஒரு ஆணியை கூட பிடுங்க முடியவில்லை.
காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் கதருகிறது கழுகு தேசம்.
இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் அறியவில்லையா?
உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்குப் பூமியில் செய்து கொடுத்திருந்தோம்.
வானத்தை அவர்கள் மீது தொடர்ந்து மழைபொழியச் செய்தோம். அவர்களுக்குக் கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம்.
அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்கினோம்.
[அல்குர்ஆன் 6:6]
அழிவு, பசி, அழுகை, கூக்குரல், வலி, பிரிவு, பாசம், தனிமை, தவிப்பு இதுவெல்லாம் மற்றவர்களுக்கு வந்தால் இப்படித்தான் என்பதை இனியாவது புரிந்தால் நன்று.
எந்த சமூகத்தின் அழிவிற்க்கும்
நாம் மகிழ்வதற்கில்லை அப்பாவிகளை இறைவன் பாதுகாக்க வேண்டும்.
அது காஸாவாக இருந்தாலும் சரி கலிபோர்னியாவாக இருப்பினும் சரியே ஆனால் அடுத்தவரை அழித்து தான் வாழ நினைப்போர் இனியாவது
திருந்த வேண்டும்.
தகவல்
கோவை பைசல்
SYF@MEDIA