நாய்களுடன் 8750 கிலோ அரிசியை போக்குவரத்து செய்த இரண்டு பேருக்கு 3 வருட சிறை
இரண்டு நாய்களுடன் 8750 கி லோ அரிசியை போக்குவரத்து செய்த லொரிச் சாரதி மற்றும் உதவியாளருக்கு 5 வருடங்களு க்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை நேற்று (10) தீர்ப்பாக வழங்கப்பட்டது
இத்தீர்ப்பினை பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதவான் பாக் யா தில்ருக் விக்ரமசிங்க இவர் கள் இருவருக்கும் தலா 10000 ரூபா அபராதத்தையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
அத்துடன் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேற்படி அரிசித் தொகையை கால்நடைகளின் உணவுக்காக வழங்குமாறும் இ ந்த அரிசித் தொகை தொடர்பி ல் சுகாதார அமைச்சின் பணிப் பாளர் நாயகத்தின் அறிக்கை ஒன்றையும் மார்ச் 3.ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமா றும் நீதவான் பொது சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார்.கடந்த 4 ஆம் திகதி திஸ்ஸ மகாராம பிரதேசத்தில் இருந்து வந்த இந்த லொறியிலிருந்து பலாங்கொடை நகர வியாபார நிலையங்களுக்கு அரிசி விநி யோகம் செய்யும் போது இந்த லொரியில் இரண்டு நாய்கள் இருப்பதை கண்டு பொது சுகா தார அதிகாரிகள் இவர்களை லொரியுடன் கைது செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)