கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை
கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம் பைசல் நியமிக்கப்பட்டு அவரின் தலைமையில் இடம்பெற உள்ள முதலாவது கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 2025/01/17 ம் திகதி வெள்ளிக்கிழமை கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு இடம்பெற உள்ளது.
தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்புடையதாக பிரதேச மட்டத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சகல அபிவிருத்திப் பணிகளையும் ஒருங்கிணைப்பு செய்வதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதும், வழிநடத்துதல் மற்றும் நடவடிக்கைகளைப் பின் தொடர்தல் என்பன பற்றிய பரிந்துரைகளை 2025/01/16 நண்பகல் 12.30 மணிக்கு முன் சமர்பிக்குமாறு கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)