இஹலபுளியங்குளம் அந் நஹ்லாவில் வருடாந்த பரிசளிப்பு விழா
அனுராதபுரம் இஹலப்புளியங்குளம் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (12) அந்நஹ்லா கல்வி மத்திய நிலையத்தில் அஹதிய்யா பாடசாலையின் அதிபர் எம்.ஆர்.எம்.ரனீஸ் மற்றும் அஹதிய்யா தலைவர் பீ.ஜாயிஸ் (உஸ்தி) ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சை 2023 சித்தியடைந்த மாணவர்களுக்கும் அஹதிய்யா தேசிய சான்றிதழ் பரீட்சை 2024 ல் சித்தியடைந்த மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளதாக அதிபர் எம்.ஆர்.எம் ரனீஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 2025 ஆம் அஹதிய்யா கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அனுமதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)