உள்நாடு

வட மத்தியில் மீன் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்கள்

வடமத்திய மாகாணத்தில் அலங்கார மீன் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மீன் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்களை வடமத்திய ஆளுநர் வசந்த ஜினதாச வழங்கி வைத்தார்.

இதற்காக மாகாண சபை நிதியியல் இருந்து 8.2 மில்லியன் ரூபா மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சினால் செலவிடப்படுள்ளது.இதன் கீழ் நிபுல் வலைகள் ,சுற்று கவர் வலைகள் ,பறவை வலைகள் , ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆஸ்பெஸ்டாஸ், சிவில் ஷீட்கள் ,ஜிடி நாணல் , தண்ணீர் மோட்டர் ,பில்லர் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் வடமத்திய மாகாணத்தில் சுமார் 3000 மீன் பண்ணையாளர்கள் இருந்துள்ளதுடன் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.2021 ஆம் ஆண்டில் விவசாயிகளின் எண்ணிக்கை 50 வீதமாக குறைந்ந்து பின்னர் படிப்படியாக அதிகரித்து தற்போது விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வடமத்திய மாகாணத்தில் அலங்கார மீன் இனங்களின் தரமான வளர்ச்சி மற்றும் வண்ண கலவைக்கு சாதகமாக இருப்பதால் அலங்கார மீன் ஏற்றுமதிக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதன் போது ஆளுநரின் செயலாளர் விஜய வனசிங்க , விவசாய அமைச்சின் செயலாளர் கே.எம்.எச்.என்.ஜயலத் ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஆனந்த ரத்நாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *