போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை தயாரித்த மூவர் கைது
போலியான ஆவணங்களை தயாரித்து சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுப் புத்தகங்களை போலியாக தயாரித்த வெரஹெர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் உட்பட மூவரை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மனம்பிட்டிய வெரஹெர மற்றும் நாரஹேன்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த 39 மற்றும் 60 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 22 போலி ஓட்டுனர் உரிம அட்டைகள், 06 கையடக்கத் தொலைபேசிகள், கணனி மற்றும் பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)