நடப்பாண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமரால் சமர்ப்பிப்பு
நடப்பாண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு புதிய வேட்புமனுக்களை கோரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும்.