கற்பிட்டி தள வைத்தியசாலைக்கு முதன் முறையாக விஷேட பொது வைத்திய நிபுணர் ( VP) நியமனம்
கற்பிட்டி தள வைத்தியசாலைக்கு முதன் முறையாக நிரந்தர விஷேட பொது வைத்திய நிபுணராக வைத்தியர் டிலத்தீரீ இஷான் கமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு புதன்கிழமை (08) கற்பிட்டி தள வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் கற்பிட்டி தளவைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் தனஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கற்பிட்டி தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், பிரதம தாதிமார், வைத்தியசாலையின் ஏனைய அதிகாரிகள், வைத்திய சாலை முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் முன்னிலையில் கற்பிட்டியின் முதலாவது நிரந்த பொது வைத்திய நிபுணர் (VP) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதுடன் புதிய ஐந்து மாடி கட்டிடத்தை யும் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் – றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)