இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்; கமின்ஸிற்கு பதில் ஸ்மித்
இலங்கை அணிக்கு எதிரான இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அவுஸ்திரேலிய அணியின் தலைவரான பெட் கமின்ஸ10க்கு ஓய்வு வழங்கப்பட அவருக்கு பதிலாக நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான ஸ்டீபன் ஸ்மித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒற்றை ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இவ்விரு போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றிருக்க இத் தொடர் அவுஸ்திரேலிய அணிக்கு ஒரு பயிற்சி தொடராக இருக்கும் என கருதலாம். மேலும் அவுஸ்திரேலிய அணி இறுதியாக இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3:1 என இலகுவாக கைப்பற்றியே இறுதிப் போட்டிக்கான தமது வரவை உறுதி செய்யதிருந்தது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் இன்று (9) அறிவிக்கப்பட்டது. இதில் அவுஸ்திரேலிய அணியின் தலைவரான பெட் கமின்ஸிற்கு ஓய்வு வழங்கியுள்ளது. அதற்கேற்ப இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஸ்டீபன் ஸ்மித் அவுஸ்திரேலிய அணியை தலைமைப் பெறுப்பேற்று வழிநடாத்துகின்றார்.
மேலும் அறிவிக்கப்பட்டுள்ள அணியைப் பொறுத்தவரையில் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரர்களான ஸ்மித்துடன் உஸ்மான் கவாஸா, லபச்சேனே, அலெக்ஸ் கெரி மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர. மேலும் பந்துவீச்சாளர்களில் மிச்சல் ஸ்டார்க், நேதன் லயன், போலன்ட் ஆகியோருடன் அறிமுக வீரர்களான வெப்ஸ்ட்டர் அத்துடன் இளம் வீரரான நேதன் மெக்சீவனிஇ இளம் சுழல்பந்துவீச்சாளர்களான டொட் மேர்பி, மேட் குஹ்னமேன் ஆகியோருக்கும் அவுஸ்திரேலிய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஜோஷ் ஹேசல்வூட், மிச்சல் மார்ஷ் ஆகியோருக்கு உபாதை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியக் குழாம்
ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), ஷோன் எப்போட், ஸ்கொட் போலன்ட், அலெக்ஸ் கெரி, கூப்பர் கொன்னொலி, ட்ராவிஸ் ஹெட் (பிரதி தலைவர்), ஜோஷ் இங்லீஷ், உஸ்மான் கவாஜா, சேம்கொன்டஸ்டாஸ், மேட் குஹ்னமேன், மார்னஸ் லபச்சேனே, நதன் லயன், நேதன் மெக்சீவனி, டொட் மேர்பி, மிச்சல் ஸ்டார்க்,போ வெப்ஸ்ட்டர்.
(அரபாத் பஹர்தீன்)