ரமழான் மாதத்தில் சாதாரண பரீட்சையை நடாத்துவதை மறு பரிசீலியுங்கள்.இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் பிரதமரிடம் வேண்டுகோள்.
க.பொ.த ( சா/தர) பரீட்சையை 2025 மார்ச் மாதம் நடாத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் எடுத்திருக்கின்ற முடிவினை மீள் பரிசீலிக்க வேண்டும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் பிரதமரும் கல்வி அமைச்சருமான கெளரவ ஹரிணி அமரசூரிய அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நோன்பு காலமானது முஸ்லிம்களின் புனித மாதமாகவும் முஸ்லிம்கள் அமல்களை அதிகமாக செய்யும் மாதமாகவும், அல் குர்ஆனை அதிகமதிகமாக ஓதுவதற்கு கால நேரத்தை செலவிடும் மாதமாகவும் விளங்குகின்றது.இதனால் மாணவர்களுக்கு பரீட்சையை ஒருமித்து எழுதுவதற்குரிய மன நிலையில் சிரமமேற்படுவதுடன், பரீட்சை கடமைகளில் ஈடுபடும் முஸ்லிம் உத்தியோகத்தர்களும் மிகுந்த அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பரீட்சை திணைக்களத்திலும், கல்வியுடன் சம்பத்தப்பட்ட உயர் பதவிகளிலும் முஸ்லிம் அதிகாரிகள் இல்லாமையையும் குறிப்பிடலாம்.
மேல் மாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தை உடனடியாக வாபஸ் பெற முடியுமானால் பரீட்சை திகதியை மாற்றுவதற்கு ஏன் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது?எனவும் பிரதமரிடம் இலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் செயலாளர் எம்.கே.எம்.நியார் கேள்வி எழுப்பியுள்ளார்