மாதி பொல விபத்தில் முஸ்லிம் தம்பதிகள் பலி
முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கி தம்பதிகளான இருவர் அதே இடத்தில் மரணமடைந்த சோக சம்பவமொன்று மாத்தளை மதிபொல எனுமிடத்தில் 7 ந்திகதி செவ்வாய் மாலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இச்சம்பவத்தில் உக்குவளை மாபேரியாவைச் சேர்ந்த ரிசாப்தீன் (70) அவரது மனைவியான ரசீதா (65) ஆகியோரே இவ்விபத்தில் மரணமானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது
மாபேரியவில் வசிக்கும் ஒருவரின் வாடகை முச்சக்கர வண்டியில் மாதிப்பொல பகுதியில் மரணமடைந்தவர்கள் உறவினரொருவரின் மரணவீடொன்றுக்கு சென்று திரும்புகையில் எதிர்ப்பாராதவிதத்தில் முச்சக்கர வண்டி பாதையைவிட்டு விலகி சுமார் அறுபது அடி பள்ளத்தில் வீழ்ந்து அங்கிருந்த கல்லொன்றில் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும்
விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த தேதமுற்றதுடன் இதில் பயணித்த மரணித்தவர்களது பெண் உறவினரொருவரும் அவரது இரண்டு வயது பிள்ளையொன்றும் சிறிய காயமடைத்துள்ளதுடன் அவர்கள் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன் முச்சக்கரவண்டி ஓட்டுநர் கடுங்காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறியமுடிகிறது இச்சம்பவம் குறித்து மாத்தளை பொலீசார் விசாரித்துவருகின்றனர்